விலங்குகளுக்கும் காய்ச்சல் வருமா? | டிங்குவிடம் கேளுங்கள்

சில நேரம் மகிழ்ச்சியிலும் கண்ணீர் சுரக்கும்; இதை ஆனந்தக் கண்ணீர் என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். வருத்தமான கண்ணீருக்கும் மகிழ்ச்சியான கண்ணீருக்கும் இடையே  ரசாயனக் கலப்பில் மாற்றம் இருக்கிறது.

Jan 22, 2025 - 13:50
 0  5
விலங்குகளுக்கும் காய்ச்சல் வருமா? | டிங்குவிடம் கேளுங்கள்

நாம் அழும்போது வரும் கண்ணீருக்கும் நாம் சிரிக்கும்போது வரும் கண்ணீருக்கும் வித்தியாசம் இருக்கிறதா, டிங்கு? - ஜி. இனியா, 8-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

நல்ல கேள்வி, இனியா. அழுகை என்பது உணர்வின் வெளிப்பாடு. வலி, துக்கம், இழிவு, இயலாமை போன்ற நிகழ்வுகளின்போது நம் உணர்வு அழுகையாக வெளிப்படுகிறது. தாங்க முடியாத வலி, பிரியத்துக்குரியவரின் மரணம், மற்றவர்கள் தரக்குறைவாகப் பேசும்போது / நடத்தும்போது, நம்மால் ஒரு செயலைச் செய்ய முடியாதபோது செக்ரடோமோட்டார் (Secretomotor) நுணுக்கமாகச் செயல்பட்டு, கண்ணீர்ச் சுரப்பியிலிருந்து (Lacrimal Gland) கண்ணீரைச் சுரக்க வைக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow