ஸ்விஸ் எனும் சொர்க்கம் 15: அசத்தலான நாடளுமன்றக் கட்டிடம்
நான்கு பிரம்மாண்டமான வளைவு கொண்ட ஜன்னல்கள் மேற்புறக் கூரைக்குக் கீழே உள்ளன. இவற்றின் கண்ணாடிகளில் சுவிட்சர்லாந்தின் நான்கு முக்கியத் தொழில்களின் பிம்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தின் தலைநகர் எது எனக் கேட்டால் பலரும் யோசிப்பார்கள். சிலர் ‘ஜெனிவா’ என்றுகூடச் சொல்வார்கள். ஆனால், சுவிட்சர்லாந்தின் தலைநகரம் ‘பெர்ன்.’ மிக அகலமான தெருக்களும் சிவப்பு வண்ண ‘ட்ராம்’களும் அந்த நகருக்குத் தனி அழகைத் தருகின்றன. அதன் நாடாளுமன்றக் கட்டிடம் ’ஃபெடரல் பேலஸ்’ என்றழைக்கப்படுகிறது. ஓர் அரண்மனைக்குரிய கம்பீரம் இதில் முழுமையாக உள்ளது. ஏதோ நேற்று கட்டியதைப் போல பளிச்சென்றும் இருக்கிறது இந்தக் கட்டிடம்.
உண்மையில் இது மூன்று கட்டிடங்களின் இணைப்பு. பச்சை கலந்த சாம்பல் வண்ணக் கற்களில் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கான 95 சதவீதக் கற்கள் சுவிட்சர்லாந்திலேயே கண்டெடுக்கப்பட்டவை. இந்தக் கட்டிடத்தை எழுப்ப 73 நிறுவனங்கள் உழைத்திருக்கின்றன. 33 சுவிட்சர்லாந்து கலைஞர்கள் இப்பணியில் ஈடுபட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
What's Your Reaction?