உலக மொழி, உலக எழுத்தாளர் | தேன் மிட்டாய் 37
உலகம் ஒரு யானை என்றால் என் மலையாளம் அந்த யானையின் துதிக்கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு சின்ன மணல்துகள். அந்தச் சின்னஞ்சிறிய மணல் துகளின் மடியில்தான் ‘எம்.டி. வாசுதேவன் நாயர்’ எனும் நான் பிறந்தேன்.

உலகம் ஒரு யானை என்றால் என் மலையாளம் அந்த யானையின் துதிக்கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு சின்ன மணல்துகள். அந்தச் சின்னஞ்சிறிய மணல் துகளின் மடியில்தான் ‘எம்.டி. வாசுதேவன் நாயர்’ எனும் நான் பிறந்தேன். அதில்தான் சுவாசிக்கத் தொடங்கினேன்.
அதில்தான் தவழ்ந்தேன். விழுந்தும் எழுந்தும் நடை பழகினேன். என் செவியில் வந்து விழுந்த முதல் ஓசை. என் நாவில் உருண்ட முதல் சொல். நான் விரல் பிடித்து எழுதிய முதல் எழுத்து. என் மலையாளம் மொழியல்ல, நான் வாழும் நிலமல்ல. என்னில் ஒரு பகுதி மலையாளம்.
What's Your Reaction?