‘வீரவணக்கம்’ படம் எப்படி - அதிர்ச்சியூட்டும் வரலாறு!

‘நீதி மறுக்கப்பட்டவனுக்கு இரக்கம் காட்டுபவன்தான் உண்மையான கம்யூ னிஸ்ட்.’ - இது கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய அதன் முதல் செயலாளரும், மக்கள் போராளியுமான தோழர் பி.கிருஷ்ண பிள்ளையின் குரல்.

Aug 31, 2025 - 11:25
 0  3
‘வீரவணக்கம்’ படம் எப்படி - அதிர்ச்சியூட்டும் வரலாறு!

‘நீதி மறுக்கப்பட்டவனுக்கு இரக்கம் காட்டுபவன்தான் உண்மையான கம்யூ னிஸ்ட்.’ - இது கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய அதன் முதல் செயலாளரும், மக்கள் போராளியுமான தோழர் பி.கிருஷ்ண பிள்ளையின் குரல். இதை, அவரது உண்மையான வாழ்க்கை வரலாற்றின் சில பக்கங் களுடன் சினிமாவுக்காகக் கொஞ்சம் கற்பனையும் கலந்து ‘வீரவணக்கம்’ ஆகத் தந்திருக் கிறார்கள்.

பிரிட்டிஷ் இந்தியாவெங்கும் சுதந்திரப் போராட்டம் தீயாகத் தகித்துக்கொண்டிருந்த 40களின் காலக்கட்டம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மட்டும், ‘ஆண்டான் - அடிமை’ ஒடுக்குமுறையைச் சாதியத்தின் பெயரால் நடைமுறையில் வைத்திருந்தது ஆதிக்க வர்க்கம். அதற்கு எதிராக கம்யூனிஸ்டுகளின் துணையோடு, ஒடுக்கப்பட்ட, சாமானிய மக்கள் துணிந்து போராடினார்கள். அந்த எழுச்சி மிக்கப் போராட்டம் எப்படி நடந்தது, மக்களும் கம்யூனிஸ்ட்டுகளும் அதற்காக எப்படிப்பட்ட இன்னல்களை எல்லாம் எதிர்கொண்டார்கள், உரிமையைப் பெற என்னவெல்லாம் தியாகங்களைச் செய்தார்கள் என்பதுதான் படத்தின் கதை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow