‘ஜென்டாங்கிள்’ கலையில் அசத்தும் பறவையியல் ஆர்வலர் சாஹித்யா - காவியமா... ஓவியமா..?

இந்த ஜென்டாங்கிள் ஓவியம் வழியாக பறவைகள், பட்டாம்பூச்சி மற்றும் பல்லுயிர் பெருக்கம் குறித்து சிறுவர், சிறுமியருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கோவை பீளமேட்டைசேர்ந்த பறவையியல் ஆர்வலர் சாஹித்யா செல்வராஜ்.

Nov 11, 2024 - 15:47
 0  4
‘ஜென்டாங்கிள்’ கலையில் அசத்தும் பறவையியல் ஆர்வலர் சாஹித்யா - காவியமா... ஓவியமா..?

கோவை: ‘ஜென்டாங்கிள்’ என்பது தியானமும், கலையும் சேர்ந்த அழகான ஓவியப் படைப்பாகும். இந்த ஜென்டாங்கிள் ஓவியம் வழியாக பறவைகள், பட்டாம்பூச்சி மற்றும் பல்லுயிர் பெருக்கம் குறித்து சிறுவர், சிறுமியருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கோவை பீளமேட்டைசேர்ந்த பறவையியல் ஆர்வலர் சாஹித்யா செல்வராஜ்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் எம்எஸ்சி தாவரவியல் படிப்பைமுடித்தேன். பின்னர் மருத்துவ தாவரவியல் ஆய்வுப் படிப்பில் பி.எச்டி. முடித்துள்ளேன். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை செல்வராஜுடன் ஆனைகட்டியில் மலையேற்றம் சென்றபோது, இயற்கை மீதான ஆர்வம் ஏற்பட்டது. பறவைகள், பட்டாம்பூச்சிகள் குறித்து புரிதல் ஏற்பட்டது. இந்த மலையேற்றங்கள் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் மண்டலங்களை அறிய ஒரு கண் திறப்பாக இருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow