ஒளிரும் தேவ அழகு... இது கிறிஸ்துமஸ் மரத்தின் கதை!
கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் ஸ்டார், கிறிஸ்துமஸ் பரிசு, கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை, கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் கேக் போலவே கிறிஸ்துமஸ் மரமும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது.

இங்கிலாந்து நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் மரக்கிளைகளையும் பச்சை இலைக் கொத்துக்களையும் வீட்டு வாசலில் தொங்கவிட்டால் தீய ஆவிகள் அணுகாது என்னும் நம்பிக்கை ஆழமாக இருந்தது. இந்தப் பழக்கம் சீர்திருத்த கிறிஸ்தவ மதம் தோன்றிய பிறகு ஒழிந்தது. அப்படிப்பட்ட சீர்திருத்த கிறிஸ்தவ மதத்தைத் தோற்றுவித்தவரான மார்ட்டின் லூதர் என்ற பாதிரியாரால்தான் கிறிஸ்துமஸ் மரம் இயேசு பிறப்புக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
What's Your Reaction?