படிக்கத் தூண்டும் புத்தகங்கள்!
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள வாசிப்பு இயக்க புத்தகங்கள் குழந்தைகளை நிஜமாகவே வாசிக்கத் தூண்டுகின்றன. நான் வகுப்பு எடுக்கும் நான்காம் வகுப்பில் தரப்பட்ட அத்தனை புத்தகங்களையும் வாசித்து முடித்துவிட்ட ஏழெட்டு மாணவர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள வாசிப்பு இயக்க புத்தகங்கள் குழந்தைகளை நிஜமாகவே வாசிக்கத் தூண்டுகின்றன. நான் வகுப்பு எடுக்கும் நான்காம் வகுப்பில் தரப்பட்ட அத்தனை புத்தகங்களையும் வாசித்து முடித்துவிட்ட ஏழெட்டு மாணவர்கள் உள்ளனர். ஒரு நூலக அடுக்கை முழுமையாக அவர்கள் காலி செய்துவிட்ட பெருமிதத்தை, இதற்கு முன் நாங்கள் சந்தித்திருக்கவில்லை.
வாசிப்பும் விளையாட்டும்: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கப் பள்ளிக் கல்வித் துறையால் ‘வாசிப்பு இயக்கம்’ தொடங்கப்பட்டது. திக்கித் திணறி வாசிக்கும் குழந்தைகளுக்கும்கூடப் பிடித்த புத்தகம் என்று சொல்லிக்கொள்ள இந்தத் தொகுப்பில் பல புத்தகங்கள் இருந்தன.
What's Your Reaction?