உடனடித் தீர்வு சரியா? | மனதின் ஓசை 9
பள்ளி, கல்லூரிகளில் ஒத்த வயதுடையோரின் கேலி, கிண்டல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவர்கள் தரும் அழுத்தங்கள் ஆகியவை வளரிளம் பருவத்தினரின் உறவுகளில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

பள்ளி, கல்லூரிகளில் ஒத்த வயதுடையோரின் கேலி, கிண்டல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவர்கள் தரும் அழுத்தங்கள் ஆகியவை வளரிளம் பருவத்தினரின் உறவுகளில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்தச் சூழலில் ஒட்டுமொத்த சமூகமும் விழித்துக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை.
மாற்றம் ஏற்படும் பருவம்: வளரிளம் பருவத்தில்தான் ஒருவருக்கு இன்னொருவரின் நிலையிலிருந்து பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் திறன் வளர்கிறது. சிந்தனைக்கும் அனுபவத் துக்கும் இடையேயான தொடர்பினைப் புரிந்துகொள்வதிலும் நல்ல மாற்றம் ஏற்படுகிறது. இது கேள்வி கேட்கும் பருவமும்கூட. சரி, தவறைப் பிரித்துப் பார்த்தல், சுய ஒழுக்கக் கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளுதல், சுயத்தைப் பற்றிய புரிதல், சுயமரியாதை உணர்வு ஆகியவை இந்தப் பருவத்தில்தான் ஏற்படுகின்றன.
What's Your Reaction?