40 ஆண்டு மருத்துவ சேவையில் ஆதிநாத் அறக்கட்டளை
சுமார் 40 வருடங்களைக் கடந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் ஆதிநாத் அறக்கட்டளை மூலம் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலன் பெற்றிருக்கிறார்கள்.

விபத்து, போலியோ போன்றவற்றால் கால்கள் செயலிழந்த ஏழை, எளிய மக்களுக்குச் செயற்கையான கால்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நாற்காலிகள் ஆகியவற்றை வழங்கி அவர்களின் மறுவாழ்வுக்கு உறுதுணையாக இருந்துவருகிறது சென்னை சூளையில் இயங்கிவரும் ‘ஆதிநாத் அறக்கட்டளை.’1979ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆதிநாத் அறக்கட்டளையின் தற் போதைய தலைவராக மோகன் ஜெயின் உள்ளார்.
சுமார் 40 வருடங்களைக் கடந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் ஆதிநாத் அறக்கட்டளை மூலம் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலன் பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் அளவிலான சமூகப் பணிகள் இந்த அறக்கட்டளை மூலம் செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?