அழகுக் கலை நிபுணர் ஆனேன் | வாழ்ந்து காட்டுவோம்!
என் பெயர் கஸ்தூரி. நான் திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டாரம் தென்பள்ளிப்பட்டு ஊராட்சியில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறேன்.

என் பெயர் கஸ்தூரி. நான் திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டாரம் தென்பள்ளிப்பட்டு ஊராட்சியில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறேன். எனக்கு 31 வயது. இளநிலை பட்டப்படிப்பு (BCA) படித்துள்ளேன். எனக்கு இரண்டு குழந்தைகள். உடல் நலம் சரியில்லாததால் என் கணவர் இறந்துவிட்டார். அதனால், குடும்பச் செலவுகளைச் சமாளிக்க அழகுக் கலை நிபுணர் பட்டயப் படிப்பு படித்தேன். பின்னர் RSETI மற்றும் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் அழகுக் கலை நிபுணர் மற்றும் ஆரி கலை பயிற்சியின் பயிற்றுநராக இருந்தேன்.
திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் ஊராட்சியில் சிறிய அளவில் அழகு நிலையம் தொடங்கினேன். போதுமான உபகரணங்கள் இல்லாததால் குறிப்பிட்ட சேவைகளை மட்டுமே வழங்க முடிந்தது. அதற்கேற்ப வருமானமும் குறைவாகத்தான் கிடைத்தது.
What's Your Reaction?