ஆருத்ரா தரிசனம் | திருஉத்தரகோசமங்கையில் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஜன.13ல் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

Jan 5, 2025 - 17:25
 0  4
ஆருத்ரா தரிசனம் | திருஉத்தரகோசமங்கையில் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய திருவிழா

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஜன.13ல் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் மிகப் பழமையான மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயில் உள்ளது. இங்கள்ள நடராஜர் சந்நிதியில் விலை மதிப்பற்ற ஒற்றை பச்சை நிற மரகத கல்லால் ஆன நடராஜருக்கு மார்கழி மாதத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய சந்தனம் காப்பு படி களைதல், அபிஷேகம், சந்தனம் காப்பிடுதல் மற்றும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow