‘ஆரூரா தியாகேசா’ கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலம்!

‘ஆரூரா தியாகேசா’ கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Apr 7, 2025 - 14:50
 0  3
‘ஆரூரா தியாகேசா’ கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலம்!

திருவாரூர்: ‘ஆரூரா தியாகேசா’ கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தேரோட்ட விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர்! திருவாரூர் சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி பெருவிழாவின் முக்கிய விழாவான ஆழி தேரோட்ட விழா இன்று (ஏப்.7) திருவாரூரில் நடைபெற்று வருகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையைக் கொண்ட உலக பிரசித்தி பெற்றது. இத்தகைய சிறப்புமிக்க தேரோட்டமானது இன்று காலை 9.01மணிக்கு தொடங்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow