கந்​தசஷ்டியை முன்​னிட்டு திருப்​போரூர், வல்​லக்​கோட்​டை, குன்​றத்​தூர் முரு​கன் கோயில்​களில் இன்று சூரசம்​ஹாரம்

கந்த சஷ்டி​யின் கடைசி நாளான இன்று (27-ம் தேதி) மாலை 5 மணிக்கு மேல் முரு​கப்​பெரு​மான் சூரபத்​மனை வதம் செய்யும் சூரசம்​ஹார நிகழ்ச்சி நடை​பெற உள்​ளது. 

Oct 27, 2025 - 08:50
 0  3
கந்​தசஷ்டியை முன்​னிட்டு திருப்​போரூர், வல்​லக்​கோட்​டை, குன்​றத்​தூர் முரு​கன் கோயில்​களில் இன்று சூரசம்​ஹாரம்

திருப்​போரூர்: கந்​தசஷ்டியை முன்​னிட்டு திருப்​போரூர், வல்​லக்​கோட்டை மற்​றும் குன்​றத்​தூர் முரு​கன் கோயில்​களில் இன்று சூரசம்​ஹாரம் நடை​பெறுகிறது. திருப்​போரூரில் உள்ள புகழ்​பெற்ற அருள்​மிகு கந்​த​சாமி கோயி​லில் ஆண்​டு​தோறும் நடை​பெறும் கந்​தசஷ்டி விழா கடந்த புதன்​கிழமை கொடியேற்​றத்​துடன் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. தின​மும் அதி​காலை நடை திறக்​கப்​பட்டு சிறப்பு அலங்​காரத்​தில் முரு​கப்​பெரு​மான் பக்​தர்​களுக்கு அருள்​பாலித்து வரு​கிறார்.

இதையொட்​டி, தின​மும் லட்​சார்ச்​சனை நடை​பெறு​வ​தால், பக்​தர்​கள் அதிக அளவில் வருகை தந்து சாமி தரிசனம் செய்​தனர். இதற்​கிடை​யில், கந்த சஷ்டி​யின் கடைசி நாளான இன்று (27-ம் தேதி) மாலை 5 மணிக்கு மேல் முரு​கப்​பெரு​மான் சூரபத்​மனை வதம் செய்​யும் சூரசம்​ஹார நிகழ்ச்சி நடை​பெற உள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow