‘அரோகரா’ முழக்கம் விண்ணதிர திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள், ‘அரோகரா, அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள், ‘அரோகரா, அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. ரூ.2 கோடியே 44 லட்சம் மதிப்பில் ராஜகோபுரத்தில் 7 தங்கக்கலசம், கோவர்த்தனாம்பிகை சந்நிதி விமானம், வல்லப கணபதி கோயில் விமானம் ஆகியவற்றை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. உபயதாரர்கள் மூலமும் பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஜூலை 14-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின.
What's Your Reaction?