மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: வில்லாபுரம் மண்டகப்படியில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி, அம்மன்!
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாளான வெள்ளிக்கிழமை வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் தங்கப் பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் எழுந்தருளினர். மாலையில் அங்கிருந்து கோயிலுக்கு புறப்பாடானபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாளான வெள்ளிக்கிழமை வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் தங்கப் பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் எழுந்தருளினர். மாலையில் அங்கிருந்து கோயிலுக்கு புறப்பாடானபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் புறப்பாடு நடைபெறும். நான்காம் நாளான வெள்ளிக்கிழமை காலையில் கோயிலிலிருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் தனித்தனி தங்கப் பல்லக்கில் புறப்பாடாகினர்.
What's Your Reaction?