சீரடி, ஷனி ஷிங்னாபூர் விமான சுற்றுலாவுக்கு நல்ல வரவேற்பு: 51 சக்தி தலங்கள் யாத்திரை தொடங்கவும் பக்தர்கள் கோரிக்கை

ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சீரடி, ஷனி ஷிங்னாபூர் சிறப்பு சுற்றுலாவுக்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

Nov 17, 2024 - 04:30
 0  4
சீரடி, ஷனி ஷிங்னாபூர் விமான சுற்றுலாவுக்கு நல்ல வரவேற்பு: 51 சக்தி தலங்கள் யாத்திரை தொடங்கவும் பக்தர்கள் கோரிக்கை

சீரடி: ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சீரடி, ஷனி ஷிங்னாபூர் சிறப்பு சுற்றுலாவுக்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 51 சக்தி தலங்களுக்கு செல்ல சிறப்பு விமான சுற்றுலா தொடங்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி சார்பில் கல்விச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா உட்பட பல்வேறு சிறப்பு சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் சீரடி, ஷனி ஷிங்னாபூருக்கு சிறப்பு விமான சுற்றுலா திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயணம் நவ. 14-ம் தேதி தொடங்கியது. 2 நாட்கள் சுற்றுலா பயணத்துக்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.19,950 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow