போலி முகமூடி அணிந்து வருகிறார்: தனுஷ் மீது நயன்தாரா பரபரப்பு புகார்

நடிகர் தனுஷ் போலி முகமூடி அணிந்து வலம் வருகிறார் என்று நடிகை நயன்தாரா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

Nov 17, 2024 - 03:55
 0  5
போலி முகமூடி அணிந்து வருகிறார்: தனுஷ் மீது நயன்தாரா பரபரப்பு புகார்

நடிகர் தனுஷ் போலி முகமூடி அணிந்து வலம் வருகிறார் என்று நடிகை நயன்தாரா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சினிமா பின்புலம் எதுவுமில்லாமல் திரைத்துறைக்கு வந்து, கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் இன்றைய நிலையை அடைந்திருக்கிறேன். நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘நயன்தாரா பியாண்ட் த ஃபேரி டேல்’ ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்களும், நலவிரும்பிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் பங்காற்றிய ஒவ்வொருவரும் பாதிப்படைந்திருக்கிறோம். காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த ‘நானும் ரவுடிதான்' திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow