பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்: ஆந்திர அமைச்சர் பட்டு வஸ்திரம் காணிக்கை

திருப்​பதி அடுத்​துள்ள திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில் கார்த்​திகை வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தாயாருக்கு ஆந்​திர அரசு சார்​பில் இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ஆனம் ராம்​நா​ராயண் ரெட்டி பட்டு வஸ்​திரத்தை காணிக்​கை​யாக வழங்​கி​னார்.

Nov 18, 2025 - 02:20
 0  4
பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்: ஆந்திர அமைச்சர் பட்டு வஸ்திரம் காணிக்கை

திருப்பதி: திருப்​பதி அடுத்​துள்ள திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில் கார்த்​திகை வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தாயாருக்கு ஆந்​திர அரசு சார்​பில் இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ஆனம் ராம்​நா​ராயண் ரெட்டி பட்டு வஸ்​திரத்தை காணிக்​கை​யாக வழங்​கி​னார்.

பிரசித்தி பெற்ற திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயி​லில் நேற்று வரு​டாந்​திர கார்த்​திகை பிரம்​மோற்சவ விழா வெகு விமரிசை​யாக​வும், கோலாகல​மாக​வும் தொடங்​கியது. நேற்று முன்​தினம் ஆகம​வி​தி​களின் படி அங்​கு​ரார்ப்பன நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. இதனை தொடர்ந்து நேற்று கோயி​லில் உள்ள தங்​கக் கொடி மரத்​தில் யானை சின்​னம் பொறித்த பிரம்​மோற்சவ கொடி ஏற்​றப்​பட்​டது. வேத பண்​டிதர்​கள் வேதங்​கள் ஓத, மங்கள வாத்​தி​யங்​கள் இசைக்க, உற்சவ முர்த்​தி​யாக பத்​மாவதி தாயார் அருகே வீற்​றிருக்க, பிரம்​மோற்சவ கொடியேற்​றம் வெகு​விமரிசை​யாக நடை​பெற்​றது.
இதனைத் தொடர்ந்​து, நேற்​று​மாலை, ஆந்​திர அரசு தரப்​பில், மாநில இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ஆனம் ராம்​நா​ராயண் ரெட்டி பட்டு வஸ்​திரங்​களை தலை மீது சுமந்து வந்​த​படி, அவற்றை தேவஸ்​தான ஆகம வல்​லுநர்​களிடம் ஒப்​படைத்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow