திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இன்று காலை தேர் திருவிழா கோலாகலம்
தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இன்று காலை தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இன்று காலை தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்சவ விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் உற்சவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
What's Your Reaction?