ஜூலை 14-ல் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைகள் தொடக்கம் 

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஜூலை 14-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள் தொடங்கின.

Jul 11, 2025 - 14:45
 0  4
ஜூலை 14-ல் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைகள் தொடக்கம் 

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஜூலை 14-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள் தொடங்கின. முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின்பு ஜூலை 14-ம் தேதி அதிகாலை 5.25 மணிமுதல் 6.10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனையொட்டி வள்ளி தேவசேனா திருமண மண்டபத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு நேற்று மாலை 5 மணியளவில் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இரண்டாவது நாள் (ஜூலை 11) 2, 3-ம் கால யாகபூஜைகளும், மூன்றாம் நாள் (ஜூலை 12) 4, 5-ம் கால யாக பூஜைகளும், நான்காம் நாள் (ஜூலை 13) 6, 7 கால யாகபூஜைகளும் நடைபெறும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow