ஞாயிறு தரிசனம்: விவசாயம் செழிக்க அரு கிடாத்தலைமேடு காமுகாம்பாள்
கிடாத்தலை கொண்ட அசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான், தேவர்களை காக்கும் பொருட்டு கடும் கோபத்துடன் போருக்குப் புறப்பட்ட அம்பிகை,

மூலவர் : துர்காபுரீஸ்வரர் அம்பாள்: காமுகாம்பாள்
தலவரலாறு: கிடாத்தலை கொண்ட அசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான், தேவர்களை காக்கும் பொருட்டு கடும் கோபத்துடன் போருக்குப் புறப்பட்ட அம்பிகை, அசுரனின் தலையைக் கொய்தாள். அது பூலோகத்தில் விழுந்த இடமே கிடாத்தலைமேடு. அசுரனாக இருந்தாலும், ஓர் உயிரைக் கொன்ற பழி தீர, அம்பாள் பூலோகம் வந்து சிவலிங்க பூஜை செய்தாள். அவள் வழிபட்ட லிங்கத்துக்கு துர்காபுரீஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் அங்கு கோயில் எழுந்தது.
What's Your Reaction?