மார்கழி மகா உற்சவம் 1: நாராயணனே நமக்கே பறை தருவான்!

மார்கழி மாதம் இனிதே பிறந்தது. ஆயர்பாடியில் வசிக்கும் இளம்பெண்களே! இப்போது நீராடக் கிளம்பலாம் வாரீர்! கூர்மையான வேலுடன் நம்மையெல்லாம் பாதுகாக்கும் நந்தகோபன், அழகிய கண்களை உடைய யசோதைபிராட்டி ஆகியோரின் சிங்கம்

Dec 16, 2024 - 05:00
 0  5
மார்கழி மகா உற்சவம் 1: நாராயணனே நமக்கே பறை தருவான்!

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் | நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் | கூர்வேல் கொடுதொழிலன் நந்தகோ பன்குமரன்||
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் | கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்||
நாரா யணனே நமக்கே பறை தருவான் | பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய். (திருப்பாவை 1)

மார்கழி மாதம் இனிதே பிறந்தது. ஆயர்பாடியில் வசிக்கும் இளம்பெண்களே! இப்போது நீராடக் கிளம்பலாம் வாரீர்! கூர்மையான வேலுடன் நம்மையெல்லாம் பாதுகாக்கும் நந்தகோபன், அழகிய கண்களை உடைய யசோதைபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய சந்திரர்களைப் போல் பிரகாசிக்கும் திருமுகத்தை உடையவனுமான, ஸ்ரீமன் நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் புரிய காத்திருக்கிறான். அவனைப் பாடிப் புகழ்ந்தால், நம்மை இந்த உலகமே வாழ்த்தும் என்று கூறி தனது தோழியரை பாவை நோன்பிருக்க அழைக்கிறாள் ஆண்டாள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow