திருத்தணி முருகன் கோயிலில் தொடங்கியது திருப்புகழ் திருப்படித் திருவிழா!
திருத்தணி முருகன் கோயிலில் இன்று காலை தொடங்கிய திருப்புகழ் திருப்படித் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் இன்று காலை தொடங்கிய திருப்புகழ் திருப்படித் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதி ஆகிய நாட்கள் திருப்புகழ் திருப்படித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், இந்தாண்டுக்கான திருப்புகழ் திருப்படித் திருவிழா, இன்று காலை வெகுவிமரிசையாக தொடங்கியது.
What's Your Reaction?