மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை - போலீஸ் விசாரணை

மறைந்த சின்னதிரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Dec 31, 2024 - 20:05
 0  4
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை - போலீஸ் விசாரணை

சென்னை: மறைந்த சின்னதிரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை திருவான்மியூர், ராஜாஜி நகரில் வசித்து வந்தவர் காமராஜ் (64). காவல் துறையில் எஸ்.ஐ.யாகப் பணியாற்றி 2019-ல் ஓய்வு பெற்றார். இவரது மகள் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் புகழின் உச்சியில் இருந்தபோது 2020-ம் ஆண்டு பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow