“மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டது மகா சிவராத்திரி!” - ஈஷா நிகழ்வில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேச்சு
“மனிதர்களின் உடல் மற்றும் மனம் இந்த கிரகத்தில் மிகவும் சிக்கலானவையாக கருதப்படுகிறது. அவற்றை சரியான முறையில் கையாள தெரியவில்லை என்றால் நல்வாழ்வு என்பது சாத்தியமில்லை” என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.

கோவை: “மனிதர்களின் உடல் மற்றும் மனம் இந்த கிரகத்தில் மிகவும் சிக்கலானவையாக கருதப்படுகிறது. அவற்றை சரியான முறையில் கையாள தெரியவில்லை என்றால் நல்வாழ்வு என்பது சாத்தியமில்லை” என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
கோவை - ஈஷா வளாகத்தில் புதன்கிழமை இரவு நடந்த மகாசிவராத்திரி தொடக்க விழாவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியது: “அனைவருக்கும் வணக்கம். சுதந்திரத்திற்கு பின் மத்திய அமைச்சர் உள்துறை அமைச்சராக ஒருவர் செயல்பட்டார். இந்தியாவை ஒருங்கிணைத்த உன்னத பணி மேற்கொண்டார். அவர்தான் சர்தார் வல்லபாய் பட்டேல். அவரது முயற்சிக்கு பின் நாட்டில் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சி காணப்பட்டது. அன்று அவர் மேற்கொண்ட பணியை போன்றே இன்றைய மத்திய உள்துறை அமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார்.
What's Your Reaction?