நரசிம்மதாரிணி திருக்கோலம் | நவராத்திரி வழிபாடு
அத்ரி முனிவரின் மனைவி அனுசுயாவை மும்மூர்த்திகளும் ஒரு சோதனைக்கு உட்படுத்தினர். ஒருசமயம் அனுசுயா, கணவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார்.

அத்ரி முனிவரின் மனைவி அனுசுயாவை மும்மூர்த்திகளும் ஒரு சோதனைக்கு உட்படுத்தினர். ஒருசமயம் அனுசுயா, கணவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார். அப்போது மும்மூர்த்திகளும் முனிவர்களைப் போன்று வேடம் தரித்து, அத்ரி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்து யாசகம் கேட்டனர். தனது கற்பின் வலிமையால் அவர்கள் யார் என்பதை உணர்ந்த அனுசுயா, அவர்களை குழந்தைகளாக்கி, அவர்களுக்கு உணவு அளித்தாள்.
மும்மூர்த்திகளைக் காணாது, முப்பெரும் தேவியரும் தவித்தனர். எங்கு சென்று அவர்களைத் தேடுவது என்று மூவரும் எண்ணியபோது, நாரதர் அவர்களுக்கு மும்மூர்த்திகள் இருக்கும் இடத்தை உணர்த்தினார். உடனே அனுசுயாவின் குடிலுக்கு வந்த முப்பெரும்தேவியர், மும்மூர்த்திகளும் குழந்தைகளாக இருப்பதை பார்த்து கோபம் கொண்டனர். அனுசுயாவின் கற்பின் சிறப்பை உலகுக்கு உணர்த்த விரும்பிய நாரதர், இரும்பால் செய்யப்பட்ட சுண்டல் கடலையை அனுசுயா, முப்பெரும்தேவியரிடம் கொடுத்து அவற்றை அவித்து வரும்படி கூறினார்.
What's Your Reaction?