மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஏப். 3-ல் தொடக்கம்: 10-ம் தேதி அறுபத்து மூவர் வீதியுலா
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.9-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதியுலாவும் நடைபெறுகிறது.

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.9-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். இங்கு ஆண்டுதோறும், பங்குனி மாதத்தில் நடக்கும் 10 நாள் பெருவிழா விடையாற்றி கலை விழாவாக நடத்தப்படுகிறது. இந்த விழாவுக்கு சென்னை மட்டுமின்றி, புறநகர், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்.
What's Your Reaction?