திரை விமர்சனம்: சூது கவ்வும் 2

பல ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஆளுங்கட்சி நிறுவனரான கண்ணபிரானுக்கு (வாகை சந்திரசேகர்) திடீரென நினைவு திரும்புகிறது

Dec 16, 2024 - 07:20
 0  3
திரை விமர்சனம்: சூது கவ்வும் 2

பல ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஆளுங்கட்சி நிறுவனரான கண்ணபிரானுக்கு (வாகை சந்திரசேகர்) திடீரென நினைவு திரும்புகிறது. ஊழல்வாதியான (சத்யசீலன்) ராதாரவி முதல்வராக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். தனது விசுவாசியும் நேர்மையானவருமான ஞானோதயத்தின் (எம்.எஸ்.பாஸ்கர்) மகன் அமைச்சர் அருமை பிரகாசம் (கருணாகரன்) ஊழலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். சத்யசீலனுக்கு எதிராகக் கட்சி ஆரம்பிக்கிறார் கண்ணபிரான். ஆனால், ‘கேம் ஆப்’ மூலமாக மக்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை அள்ளலாம் என்கிறார், அருமை பிரகாசம். அதற்கான ஏற்பாடுகளை பண்ணும்போது, குருநாத்தும் (மிர்ச்சி சிவா) அவர் கும்பலும் அவரைக் கடத்துகிறது.

இதற்கிடையே குருநாத்தைப் பிடிக்க அலைகிறார் போலீஸ் அதிகாரி பிரம்மா (யோக் ஜேபி). இவர்களுக்குள் நடக்கும் களேபரங்கள்தான் கதை. நலன் குமரசாமி இயக்கத்தில் 11 வருடத்துக்கு முன் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் அடுத்த பாகம், இது. முதல் பாகம் ஹிட்டடிக்க, கொள்ளையடிக்கும் கொள்கை உள்ளிட்ட டார்க்காமெடியும் விஜய் சேதுபதி உள்ளிட்டோரின் நடிப்பும் புதிதாக இருந்தன. ஆனால் இதில் அப்படி ஏதும் இல்லாமல் முதல் பாக கதையையே கொஞ்சம் மாற்றி படமாக்கி இருக்கிறார், அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow