திரை விமர்சனம்: ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்
முன்னாள் ரவுடியான ராஜாவின் (பரத்) காதல் மனைவி சிறுநீரக பிரச்சினை காரணமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

முன்னாள் ரவுடியான ராஜாவின் (பரத்) காதல் மனைவி சிறுநீரக பிரச்சினை காரணமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவரைக் காப்பாற்ற ரூ.15 லட்சம் தேவைப்படுகிறது. தூய்மை பணியாளரான சாவித்திரி (அபிராமி) திருநங்கையாகிவிட்ட தனது மகனின் மருத்துவப் படிப்புக்கு வாங்கிய கடனுக்காகப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். திருமணமாகி கணவன் வீட்டுக்கு வரும் அஞ்சலி நாயருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. சாதி வெறியரான நாதன் (தலைவாசல் விஜய்), தன் மகள் அனிதா (பவித்ரா) வேறு சாதியை சேர்ந்தவரைத் திருமணம் செய்வதை அறிந்து தடுக்க நினைக்கிறார். இவர்களின் சிக்கல்கள் எப்படித் தீர்க்கின்றன, இவர்களை இணைக்கும் விஷயம் என்ன? என்பதுதான் இந்த ‘ஹைபர்லிங்க்’ படத்தின் கதை.
4 மனிதர்கள் வெவ்வேறு பிரச்சினைகளில் சிக்கி விரக்தியில் இருக்கும்போது அவர்களுக்கு ஒரு துப்பாக்கி கிடைத்தால் என்ன நடக்கும் என்கிற விஷயத்தை வைத்துக் கொண்டு, அதை இறுதியில் இணைத்த விதத்தில் கவர்கிறார், இயக்குநர் பிரசாத் முருகன். இது, அது என அங்கும் இங்குமாக மாறி மாறி நகரும் கதை இனிய திரையனுபவத்தைத் தருகிறது.
What's Your Reaction?