சொர்க்க வாசல் தரிசனத்தில் சாமானியர்களுக்கு முக்கியத்துவம்: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

‘வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திறக்கப்படும் சொர்க்க வாசல் தரிசனத்தில் சாமானிய பக்தர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். எவ்வித சிபாரிசு கடிதங்களும் ஏற்கப்பட மாட்டாது’’ என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பிஆர். நாயுடு பேசினார்.

Jan 5, 2025 - 04:00
 0  4
சொர்க்க வாசல் தரிசனத்தில் சாமானியர்களுக்கு முக்கியத்துவம்: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

‘‘வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திறக்கப்படும் சொர்க்க வாசல் தரிசனத்தில் சாமானிய பக்தர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். எவ்வித சிபாரிசு கடிதங்களும் ஏற்கப்பட மாட்டாது’’ என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பிஆர். நாயுடு பேசினார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் சொர்க்க வாசல் திறந்திருக்கும். சுவாமி தரிசனத்திற்கு பின்னர், பக்தர்கள் இதில் அனுமதிக்கப்படுவர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் இந்த சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை பிரதட்சனம் செய்ய லட்ச கணக்கான பக்தர்கள் ஏழுமலையான் கோயிலுக்கு படை எடுப்பது வழக்கம். ஆதலால் பக்தர்களுக்கு தேவையான தரிசன ஏற்பாடுகள், போக்குவரத்து, பாதுகாப்பு, தங்கும் இடம், உணவு விநியோகம் போன்றவற்றின் மீது தற்போது திருப்பதி தேவஸ்தானம் மிகுந்த கவனமாக செயல்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow