மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறும் என கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் ச.கிருஷ்ணன் ஆகியோர் இன்று தெரிவித்தனர்.

Apr 14, 2025 - 17:50
 0  5
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறும் என கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் ச.கிருஷ்ணன் ஆகியோர் இன்று தெரிவித்தனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா பிரசித்தி பெற்றது. இவ்விழா ஏப்.28-ம் தேதி வாஸ்துசாந்தியுடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் முக்கிய திருவிழாக்களான ஏப்.29-ம் தேதி (சித்திரை 16)செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்குமேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெறும். மே 6ம் தேதி (சித்திரை 23) செவ்வாய்க்கிழமை இரவு 7.35 மணிக்குமேல் 7.59 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் மீனாட்சிஅம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow