மலையாள புத்தாண்டை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு புதுநாணயங்கள் பரிசளிப்பு

மலையாள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் கனிதரிசன வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு புத்தம் புது நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

Apr 14, 2025 - 19:35
 0  4
மலையாள புத்தாண்டை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு புதுநாணயங்கள் பரிசளிப்பு

தேனி: மலையாள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் கனிதரிசன வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு புத்தம் புது நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழாவுக்காக கடந்த 2-ம் தேதி கொடியேற்றப்பட்டது. ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு வழிபாடுகளுடன் பூஜைகள் நடைபெற்றது. உச்சநிகழ்வாக கடந்த 10-ம் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளிவேட்டையும், 11-ம் தேதி காலை ஐயப்பனுக்கு புனித நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழா நிறைவடைந்து கொடிஇறக்கப்பட்டது. பின்பு மலையாள புத்தாண்டான விஷூ பண்டிகைக்கான வழிபாடு தொடர்ந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow