ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் பவளவிழா
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 36-வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் 75-வது அவதாரத் திருநாள் வைபவம், சிருங்கேரி உள்ளிட்ட பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை: சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 36-வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் 75-வது அவதாரத் திருநாள் வைபவம், சிருங்கேரி உள்ளிட்ட பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் (சிருங்கேரி மடம்) 35-வது பீடாதிபதியான ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் தமது சீடராக சீதாராம ஆஞ்சநேயலு என்கிற பிரம்மச்சாரியை ஏற்றுக் கொண்டார். சிறு வயதிலேயே வேதம், சாஸ்திரம் முதலியவற்றில் நன்குகற்றுத் தேர்ந்து ஒழுக்க சீலராக விளங்கிய சீடருக்கு 1974-ம் ஆண்டு நவ. 11-ம் தேதி சந்நியாசிரமத்தை முறைப்படி வழங்கி ‘ஸ்ரீ பாரதி தீர்த்தர்’ என்கிற யோகப் பட்டத்தை வழங்கினார்.
What's Your Reaction?