சபரிமலையில் நாளை மண்டல பூஜை நிறைவு: சந்நிதானத்தில் பணிபுரிந்தவர்களுக்கு விருந்து
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளையுடன் மண்டல பூஜை நிறைவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து சந்நிதானத்தில் பணிபுரிந்தவர்களுக்கு இன்று (டிச.25) விருந்து அளிக்கப்பட்டது.

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளையுடன் மண்டல பூஜை நிறைவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து சந்நிதானத்தில் பணிபுரிந்தவர்களுக்கு இன்று (டிச.25) விருந்து அளிக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 16-ம் தேதியில் இருந்து மண்டல காலத்துக்கான வழிபாடுகள் தொடங்கின. நாளை (டிச.26) விழாவின் உச்ச நிகழ்வாக மண்டல பூஜை நடைபெற உள்ளது. இந்நாளில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க அங்கி இன்று (டிச.25) மதியம் 1.30 மணிக்கு பம்பைக்கு வந்தது. பின்பு தலைச்சுமையாக இந்த ஆபரணப் பெட்டி சந்நிதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மாலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.
What's Your Reaction?