மதுரை வந்த கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு - எதிர்சேவையில் திரண்ட பக்தர்கள்
மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலிருந்து நேற்று மாலையில் புறப்பட்ட கள்ளழகருக்கு இன்று அதிகாலை 4 மணியளவில் மதுரை மூன்று மாவடியில் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி தண்ணீர் பீய்ச்சி அடித்து பக்தர்கள் வரவேற்றனர்.

மதுரை: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலிருந்து நேற்று மாலையில் புறப்பட்ட கள்ளழகருக்கு இன்று அதிகாலை 4 மணியளவில் மதுரை மூன்று மாவடியில் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி தண்ணீர் பீய்ச்சி அடித்து பக்தர்கள் வரவேற்றனர்.
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ல் தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள், இரண்டாம் நாள் மாலையில் சுந்தரராஜ பெருமாள் கோயில் தோளுக்கினியானில் எழுந்தருளினார். மூன்றாம் நாளான நேற்று காலையில் தோளுக்கினியானில் சுந்தரராஜபெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
What's Your Reaction?