திருப்பதியில் ஜூலை மாதத்தில் 1.24 கோடி லட்டு பிரசாதம் விற்பனை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூலை மாதம் லட்டு விற்பனையில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ஏழுமலையானின் லட்டு பிரசாதம் 1,25,10,300 தயாரிக்கப்பட்டதில், 1,24,40,082 விற்பனையாகி உள்ளது.

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூலை மாதம் லட்டு விற்பனையில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ஏழுமலையானின் லட்டு பிரசாதம் 1,25,10,300 தயாரிக்கப்பட்டதில், 1,24,40,082 விற்பனையாகி உள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,04,57,550 லட்டு பிரசாதங்கள் விற்பனையானது. இதில் விசேஷம் என்னவெனில் கடந்த ஜூலை 12-ம் தேதியன்று மட்டும் 4,86,134 லட்டு பிரசாதங்கள் விற்கப்பட்டுள்ளன.
What's Your Reaction?