சபரிமலை சந்நிதானத்தில் மழலைகளின் உற்சாக தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது ஏராளமான மழலைகள் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டு வருகின்றன. கன்னிச்சாமியாக வந்துள்ள பல குழந்தைகளுக்கும் இங்குள்ள வழிபாட்டு முறைகள் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதால் மகிழ்வுடன் சந்நிதானத்தில் வலம் வருகின்றனர்.

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது ஏராளமான மழலைகள் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டு வருகின்றன. கன்னிச்சாமியாக வந்துள்ள பல குழந்தைகளுக்கும் இங்குள்ள வழிபாட்டு முறைகள் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதால் மகிழ்வுடன் சந்நிதானத்தில் வலம் வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் பதிவு மூலம் தினமும் 70 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைன் பதிவுதாரர்கள் தினமும் சுமார் 15 ஆயிரம் பேர் வரை வருவதில்லை. இதனால் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு மற்ற பக்தர்களின் தரிசனத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
What's Your Reaction?