விழுப்புரம் ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்
விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் இன்று (ஜுன் 11-ம் தேதி) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது

விழுப்புரம்: விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் இன்று (ஜூன் 11) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் விழா கடந்த 3-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்கு தினசரி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும், சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், திருப்பல்லக்கு, இந்திர விமானம், குதிரை வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
What's Your Reaction?