திருப்பதி பிரம்மோற்சவம் 7-ம் நாள் விழா: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பர் பவனி
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 24-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் பிரம்மாண்டமாக தொடங்கியது. அதே நாள் மாலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சுவாமிக்கு அரசு தரப்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினர். அன்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பர் வீதி உலாவுடன் பிரம்மோற்சவ விழாவின் வாகன சேவைகள் தொடங்கப்பட்டன.
What's Your Reaction?