‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்கு தெலுங்கு ரசிகர்கள் எதிர்ப்பு- ரிஷப் ஷெட்டி விளக்கம்
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘கந்தாரா: சாப்டர் 1’ படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தபோது, ரிஷப் ஷெட்டி, கன்னடத்தில் பேசினார்.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘கந்தாரா: சாப்டர் 1’ படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தபோது, ரிஷப் ஷெட்டி, கன்னடத்தில் பேசினார். அப்போதுதான் என் மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேச முடியும் என்றார். இதற்குத் தெலுங்கு ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தெலுங்கு மொழியைத் தெரிந்துகொண்டே அவர் பேசாமல் சென்றுவிட்டார் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
ஏற்கெனவே பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ பட வெளியீட்டின் போது சில கன்னட அமைப்புகள் பெங்களூரில் எதிர்ப்புத் தெரிவித்ததையும் ஒப்பிட்டு, ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தைப் புறக்கணிப்போம் என்ற ஹேஷ்டேக்கை சமூக வலை தளத்தில் உருவாக்கியுள்ளனர். இது டிரெண்டானது.
What's Your Reaction?