வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ படத்தை மறு ஆய்வு செய்வதாக சென்சார் போர்டு தகவல்

‘மனுஷி’ திரைப்படத்தை இன்று (ஜூன் 11) மீண்டும் பார்வையிட்டு மறு ஆய்வு செய்ய இருப்பதாக, சென்சார் போர்டு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

Jun 11, 2025 - 16:20
 0  5
வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ படத்தை மறு ஆய்வு செய்வதாக சென்சார் போர்டு தகவல்

சென்னை: வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை இன்று (ஜூன் 11) மீண்டும் பார்வையிட்டு மறு ஆய்வு செய்ய இருப்பதாக, சென்சார் போர்டு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குநர் கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow