தாடி வசீகரம்தான், ஆனால்... - ‘கிருமித் தொற்று’ அலர்ட் தரும் ஆய்வுகள் சொல்வது என்ன?

தாடி வசீகரமானதாக இருக்கலாம். ஆனால் அதனால் ஏற்படும் தொற்றுகள் ஏராளம் என்கின்றனர். உண்மையில் தாடி அத்தனை பெரிய சுகாதார சவாலா? ஆதாரங்களை கூர்ந்து கவனித்தால் ஒரு நுணுக்கமான புரிதலை நாம் எட்ட முடியும்.

Jun 11, 2025 - 17:40
 0  3
தாடி வசீகரம்தான், ஆனால்... - ‘கிருமித் தொற்று’ அலர்ட் தரும் ஆய்வுகள் சொல்வது என்ன?

ஒரு காலத்தில் ஒரு ஜென்டில்மேனின் அடையாளமாக க்ளீன் ஷேவ் இருந்தது. ஆனால், இன்று திருமண முகூர்த்ததுக்குக் கூட தாடியை விதவிதமாக டிரிம் பண்ணிக் கொள்ளும் மாப்பிள்ளைகள் தான் அதிகம். தாடி வந்த பையன்களையே பெண்களுக்குப் பிடிக்கும் என்றொரு ட்ரெண்டும் இதற்குக் காரணம். சில நேரங்களில் சிலரை தாடியுடன் பார்த்தால் அவர்கள் அதில் வசீகரமாக இருப்பது போலவே இருக்கும். தாடி வசீகரமானதுதான், ஆனால் அது முகத்தில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை கிருமிகள் வாழ தோதான இடம் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

பொதுவாகவே மனித உடலின் தோல் பகுதி லட்சக்கணக்கான நுண்ணுயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடம். குறிப்பாக பாக்டீரியாக்கள், பூஞ்சை, வைரஸ்கள் வாழ முகத்தில் இருக்கும் ரோமங்கள் மிகவும் உகந்த சூழலாக இருக்கின்றன எனக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆராய்ச்சி முடிவு ஏற்கெனவே ‘தாடி அசுத்தமானது’ என்ற வாதங்களுக்கு வலு சேர்த்துள்ளது. தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் அண்மையில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று, ஒருவரின் தாடியில் இருப்பதைவிட கழிவறையில் குறைவான அளவிலேயே கிருமிகள் இருக்கின்றன எனக் கூறியுள்ளது. உண்மையில் தாடி அத்தனை பெரிய சுகாதார சவாலா? ஆதாரங்களை கூர்ந்து கவனித்தால் ஒரு நுணுக்கமான புரிதலை நாம் எட்ட முடியும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow