பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.22-ம் தேதி தொடக்கம்

திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி மலைக்​கோயி​லில் கந்​தசஷ்டி விழா வரும் 22-ம் தேதி நண்​பகல் 12 மணிக்கு உச்​சி​காலத்​தில் தொடங்​கு​கிறது. விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை நடை​பெற உள்​ளது.  

Oct 8, 2025 - 06:25
 0  9
பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.22-ம் தேதி தொடக்கம்

பழநி: பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லில் கந்​தசஷ்டி விழா வரும் 22-ம் தேதி காப்​புக் கட்​டு​தலுடன் தொடங்​கு​கிறது. திண்டுக்​கல் மாவட்​டம் பழநி மலைக்​கோயி​லில் கந்​தசஷ்டி விழா வரும் 22-ம் தேதி நண்​பகல் 12 மணிக்கு உச்​சி​காலத்​தில் தொடங்குகிறது. விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை நடை​பெற உள்​ளது.

அன்று அதி​காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்​கப்​படும். மாலை 5.30 மணிக்கு நடக்​கவேண்​டிய சாயரட்சை பூஜை பிற்​பகல் 1.30 மணிக்கு நடை​பெறும். பிற்​பகல் 3 மணிக்கு சின்​னக்​கு​மாரசு​வாமி அசுரர்​களை வதம்​புரி​யும் பொருட்​டு, மலைக்​கொழுந்து அம்​மனிடம் வேல் வாங்​குதல் நிகழ்ச்​சி​யுடன் சந்​நிதி அடைக்​கப்​படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow