“முறையாக வரி செலுத்தியோருக்கு சலுகைகள் வழங்குக” - நடிகர் விஜய் சேதுபதி

மதுரையில் வருமான வரித்துறை சார்பில் வரிசெலுத்துவோர் மைய தொடக்க விழா  தமுக்கம் மைதான மாநாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் ஹெச்.பி.எஸ்.கில் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

Jan 30, 2025 - 13:45
 0  3
“முறையாக வரி செலுத்தியோருக்கு சலுகைகள் வழங்குக” - நடிகர் விஜய் சேதுபதி

மதுரை: மதுரையில் வருமான வரித்துறை சார்பில் வரிசெலுத்துவோர் மைய தொடக்க விழா தமுக்கம் மைதான மாநாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் ஹெச்.பி.எஸ்.கில் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மதுரை வருமான வரித்துறை தலைமை ஆணையர் சஞ்சய்ராய், முதன்மை ஆணையர் டி.வசந்தன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: நானும் படிப்பை முடித்துவிட்டு சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்டிடம் 6 மாதம் வேலை பார்த்து பெரிய நிறுவனங்களில் தணிக் கைக்கு சென்றுள்ளேன். அரசு விஷயங்களை தெரிந்து கொள்ளவே சிரமமாக இருக் கும். ஆனால், வருமான வரித்துறை சார்பில் இணை யதளத்தில் எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow