விராட் கோலியை காண டெல்லி மைதானத்தில் திரண்ட ரசிகர்கள்: நெரிசலில் சிக்கி சிலர் காயம்

விராட் கோலி 12 ஆண்டுக்குப் பிறகு ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுகிறார். இந்நிலையில், டெல்லி அணிக்காக விளையாடும் விராட் கோலியைக் காண காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் குறைந்தது மூவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. 

Jan 30, 2025 - 13:20
 0  4
விராட் கோலியை காண டெல்லி மைதானத்தில் திரண்ட ரசிகர்கள்: நெரிசலில் சிக்கி சிலர் காயம்

புதுடெல்லி: விராட் கோலி 12 ஆண்டுக்குப் பிறகு ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுகிறார். இந்நிலையில், டெல்லி அணிக்காக விளையாடும் விராட் கோலியைக் காண அருண் ஜேட்லி மைதானத்தில் காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் குறைந்தது மூவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

ரஞ்சி கோப்பை 2024-25 சீசனின் கடைசி லீக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இதில், இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி பங்கேற்கும் போட்டி என்பதால் டெல்லி - ரயில்வேஸ் அணிகள் மோதும் போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow