திருச்செந்தூரில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடக்கம்: விரதமிருந்து வழிபாடு செய்ய குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று (நவ.2) தொடங்குகிறது.

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று (நவ.2) தொடங்குகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டிவிழாவையொட்டி இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருள்கிறார். யாகசாலை பூஜைகளுக்குப் பின்னர் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது.
What's Your Reaction?