ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர செப்புத் தேரோட்டம் கோலாகலம் 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழாவில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலை செப்புத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 

Apr 11, 2025 - 14:00
 0  5
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர செப்புத் தேரோட்டம் கோலாகலம் 

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழாவில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று காலை செப்புத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவில் தினசரி பல்வேறு அலங்காரங்களில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 5-ம் நாள் விழாவான ஏப்ரல் 7-ம் தேதி கருட சேவை நடைபெற்றது. நேற்று இரவு ஆண்டாள் பூப்பல்லக்கிலும், ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow