மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு: சரண கோஷங்களால் அதிர்ந்த சந்நிதானம்

மண்டல கால வழிபாட்டுக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் சரணகோஷங்கள் எழுப்பியபடி தர்மசாஸ்தாவை மெய் உருக வழிபட்டனர்.

Nov 16, 2025 - 19:25
 0  3
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு: சரண கோஷங்களால் அதிர்ந்த சந்நிதானம்

குமுளி: மண்டல கால வழிபாட்டுக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் சரணகோஷங்கள் எழுப்பியபடி தர்மசாஸ்தாவை மெய் உருக வழிபட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச.27-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதற்காக இன்று(நவ.16) மாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபம் ஏற்றி, மங்கல இசை முழங்க நடையைத் திறந்துவைத்தார். பின்பு 18-ம் வழியே கீழிறங்கி ஆழிக்குண்டத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரூ உள்ளிட்டோர் தீபம் ஏற்றினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow