திருவூடல் - மறுவூடல் திருவிழா கோலாகலம்: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம்

திரு​வண்ணாமலை அண்ணா​மலை​யார் கோயி​லில் நடைபெற்ற திரு​வூடல் - மறுவூடல் திரு​விழாவையொட்டி அண்ணா​மலை​யார் நேற்று கிரிவலம் சென்​றார்.

Jan 17, 2025 - 03:00
 0  4
திருவூடல் - மறுவூடல் திருவிழா கோலாகலம்: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம்

திருவண்ணாமலை: ​திரு​வண்ணாமலை அண்ணா​மலை​யார் கோயி​லில் நடைபெற்ற திரு​வூடல் - மறுவூடல் திரு​விழாவையொட்டி அண்ணா​மலை​யார் நேற்று கிரிவலம் சென்​றார்.

சிவபெரு​மானை மட்டும் பிருங்கி மகரிஷி வணங்​கிய​தால் பார்வதி சினம் கொண்​டார். இதனால், சுவாமி​யுடன், அம்பாளுக்கு ஊடல் ஏற்படு​கிறது. இதையொட்டி, திரு​வூடல் திரு​விழா நடத்​தப்​படு​கிறது. நடப்​பாண்டு திரு​வூடல் திரு​விழா திரு​வண்ணாமலை அண்ணா​மலை​யார் கோயி​லில் நேற்று முன்​தினம் இரவு தொடங்​கியது. சுவாமி​யுடன் ஊடல் அதிக​மான​தால் கோயி​லின் 2-ம் பிரகாரத்​தில் உள்ள தனது சந்நி​திக்கு சென்ற அம்பாள், தாழிட்டுக் கொள்​கிறார். சுவாமி​யும் குமரக் கோயிலுக்கு சென்​று​விடுகிறார். இந்த நிகழ்வுகள் நடத்​தப்​பட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்​தப்​பட்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow