‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கம் விண்ணை முட்ட பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கம் விண்ணை முட்ட பக்தர்கள் புடைசூழ தங்கக் குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.

மதுரை: ‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கம் விண்ணை முட்ட பக்தர்கள் புடைசூழ தங்கக் குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். செவ்வாய்க்கிழமை (மே.12) அதிகாலை 6 மணி அளவில் மதுரை - ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் எழுந்தருளினார். இந்த நிகழ்வின்போது லட்சோப லட்சம் மக்கள் கள்ளழகரை தரிசித்து வழிபட்டனர்.
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ல் தொடங்கியது. முதல் நாள், இரண்டாம் நாள் மாலையில் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியானில் எழுந்தருளினார். மூன்றாம் நாளான நேற்று முன்தினம் காலையில் தோளுக்கினியானில் சுந்தரராஜபெருமாள்திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
What's Your Reaction?